Advertisement
சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.50 கோடியில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னைக்கான அறிவிப்புகளின் விவரம்:
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.50 கோடியில் புதிய சுற்றுச் சூழல் பூங்கா என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement