புதுடெல்லி: ‘பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி வருகின்றனர்’ என்று பேசிய ராகுல் காந்தியிடம் விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டுக்கு டெல்லி போலீஸார் நேற்று சென்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் யாத்திரையை முடித்தார் ராகுல். அப்போது நகரில் அவர் பேசும்போது, ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விளக்கம் அளிக்கவில்லை.
‘பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி வருகின்றனர்’ என்று பேசிய ராகுல் காந்தியிடம் விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டுக்கு டெல்லி போலீஸார் நேற்று சென்றனர்.
Author: செய்திப்பிரிவு