பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலைய‌த்தில் நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூரு ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சவும்யா லதா சம்பவ இடத்துக்கு வந்துசடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். ரயில் நிலையம், அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாலை 7.30 மணியளவில் ஆட்டோவில் வந்த 3 பேர் இந்த பிளாஸ்டிக் டிரம்மை ரயில் நிலையத்தில் இறக்கி வைத்துவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது
Author: இரா.வினோத்