பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட ரூ.8,480 கோடி செலவிலான பெங்களூரு – மைசூரு விரைவு சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் விமர்சனம் எழுந்துள்ளது.
பெங்களூரு – மைசூரு இடையேயான 118 கி.மீ. விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, “இந்த சாலையின் இறுதிக்கட்ட பணிகள், மழை நீர் மேலாண்மை உள்ளிட்டவை இன்னும் முடிவடையவில்லை. இதனால் பிரதமர் மோடி இந்த சாலையை திறந்தால் மழை வெள்ளம் தேங்க வாய்ப்பு இருக்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில் மோடி அவசர அவசரமாக இந்த சாலையை தொடங்கி வைக்கிறார்” என விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு – மைசூரு இடையே ரூ.8,480 கோடி செலவில் 118 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட விரைவு சாலையை திறந்து வைத்தார்.
Author: இரா.வினோத்