பெங்களூரு: "பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா" என ட்வீட்டில் கருத்துப் பதிவு செய்த கன்னட சினிமா நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பெங்களூரு மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத உணர்வை புண்படுத்தியதாக நடிகர் சேத்தன் குமார் மீது சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். அவர் பதிவு செய்த ட்வீட்டின் விவரம்:
“பொய்களால் கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவா” என ட்வீட்டில் கருத்துப் பதிவு செய்த கன்னட சினிமா நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு