பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு

11

காளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அடுத்துள்ள ஏர்பேடு மண்டலம் பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை இம் மாதம் 18 ஆம் தேதி தனியார் நிறுவனத்தினர் மூடப்பட்தோடு வருவாய் மற்றும் போலீசார் ஆதரவோடு நெடுஞ்சாலைக்கு குறுக்காக (தடுப்பு) சுவரை அமைத்து விட்டனர். இதனால் சிந்தேப்பள்ளி கிராமத்திற்குச் செல்லும் பாதை மூடப்பட்டன.  மூடப்பட்ட பாதையை (எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்) ESL தொழில்துறையினர்  திறக்கும் வரை போராடுவோம் என திங்கட்கிழமை (நேற்று) முதல் சிந்தேபள்ளி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை  தொடங்கினர்.  சிந்தேபள்ளி கிராமத்தினருக்கு ஆதரவாக, ஜனசேனா கட்சித் காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளர் வினுதா  மற்றும் அவரது கணவர் சந்திரபாபு ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிந்தேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  செஞ்சுரெட்டி, மகாநந்த ரெட்டி, மோகன ரெட்டி, செஞ்சுராமையா, லோகேஷ், வெங்கடசுப்பையா ராயல், வெங்கடரத்தினம், துளசியம்மா, ரேணுகா, பார்தி, சாய்குமார், டெல்லிபாபு, அனில்குமார், சீனிவாசலு, கிரிபிரசாத் ஆகிய 17 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில்   ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகி  வினுதா கோட்டாவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.  அவருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சிலரின் உடல்நிலையும் மோசமடைந்து வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.