தூத்துக்குடி: தமிழகத்தைச் சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் ஆத்தூர் பகுதி வெற்றிலை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
Author: ரெ.ஜாய்சன்