இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இச்செய்தியை ஜூலை 29-ம் தேதி, சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக அதிகரித்துள்ளது. புலிகளை அதிகமாகக் கொண்டுள்ள 20 மாநிலங்களில், 3,81,400 கி.மீ. பரப்பளவிலான காடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிலான எண்ணிக்கை இது. புலிகள் அதிகரித்துள்ளது, இயற்கை காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். புலிகள் எண்ணிக்கையை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இந்தியா 4 ஆண்டுகளுக்குள் சாத்தியப்படுத்திவிட்டதாக மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.
நந்தினி வெள்ளைச்சாமி