புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களையும் கேட்டுள்ளன.
மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்.5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
Author: செய்திப்பிரிவு