புதுச்சேரி: சிறுதானிய ஆண்டு என்பதால் புதுச்சேரி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் வழங்கப்படும் என அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்: "குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் பெறலாம். கணினி மயமாகப்பட்டு ஆன்லைன் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. சேவைகள் துரிதப்படுத்தப்படும்.
சிறுதானிய ஆண்டு என்பதால் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறியுள்ளார்
Author: செ.ஞானபிரகாஷ்