புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வராத 24 ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து அலுவலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டார். தாமதமாக வருவோருக்கு முக்கியப்பொறுப்பு தரக்கூடாது. உரிய நேரத்தில் வராதோரை பணியிடமாற்றம் தரவும் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பலர் புகார் தெரிவித்தனர். இப் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அரசு அலுவலங்களை ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில், இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை பதிவேட்டை எடுத்து பார்த்தபோது 50 சதவிதம் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வராதது தெரியவந்தது. அதாவது 50 பேரில் 24 பேர் பணிக்கு வரவில்லை.
புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வராத 24 ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து அலுவலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டார்.
Author: செ.ஞானபிரகாஷ்