Advertisement
புதுச்சேரி: சமூக அரசியல் சார்ந்த திறனை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில், புதுச்சேரியில், சட்டப் பேரவை நிகழ்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2 நாட்களாக திருவள்ளவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து சென்றனர். மூன்றாம் நாளான நேற்று சுசிலாபாய் அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பேரவைநிகழ்வுகளை நேரில் கண்டறிந் தனர்.
சமூக அரசியல் சார்ந்த திறனை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில், புதுச்சேரியில், சட்டப் பேரவை நிகழ்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement