புதுச்சேரி: “புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க, ஜிஎஸ்டி வரி மற்றும் மின்கட்டணத்தில் சலுகை தர அரசாணை வெளியாகவுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்கினால் 3 ஆண்டுகளுக்கு எந்தச் சான்றிதழும் தேவையில்லை” என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
சிவசங்கர் (பாஜக), அங்காளன்(சுயேட்சை): “புதிய தொழில்களை ஈர்க்க புதிய தொழில் கொள்கைக்கான பரிந்துரைகளை செய்ய வல்லுநர் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? கவர்ச்சிகரமான புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்குமா? முதலீட்டாளர்கள் மாநாடை அரசு நடத்துமா?”
புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜிஎஸ்டி வரி மற்றும் மின்கட்டணத்தில் சலுகை தர அரசாணை வெளியாகவுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்கினால் 3 ஆண்டுகளுக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை
Author: செ.ஞானபிரகாஷ்