புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி உள்துறை அமைச்சரின் உறவினர் கொலை – பாஜகவினர் மறியலால் பதற்றம்

12

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், பாஜக பொறுப்பாளருமான செந்தில்குமரன் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுப்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, "காவல் துறை கடமையை செய்யும்" என்று உறுதி தந்தார். இச்சூழலில் கொலையான செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதால் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கனுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் செந்தில்குமரன் (45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரான இவர் மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு அவர் மீது வில்லியனூரில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி, அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்து தப்பியது. அவர் உயிர் இழந்ததை உறுதி செய்த 7 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இறந்து கிடந்த செந்தில்குமரனின் உடலை பார்த்து அழுதார். செந்தில்குமரன் உடலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு விட்டு புறப்பட்டார்.

புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும் பாஜக பொறுப்பாளருமான செந்தில்குமரன் நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா எழுப்பினார்.

Author: செ. ஞானபிரகாஷ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.