புதுச்சேரி: “ஏழைகள் கேள்வி கேட்டால் அரசு பதில் தரும் என்பதை அறிந்தோம்” என்று புதுச்சேரி பேரவை நிகழ்வுகளை பார்த்த பின்பு கல்வியமைச்சரிடம் கேள்விகளை எழுப்பிய பள்ளி மாணவிகள் குறிப்பிட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை பள்ளி மாணவிகள் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட பின்பு இன்று கல்வியமைச்சர் நமச்சிவாயத்தை மாணவிகள் சந்தித்து கேள்வி எழுப்பினர். அப்போது மாணவிகள் கேள்விக்கு பதில் தந்தார். மாணவி ஒருவர், "புதுச்சேரியில் திறந்ததுள்ள கழிவுநீர் கால்வாய்களை மூட முடியாதா?" என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "நிதி இல்லை. திட்டத்தை பாதிக்காமல் ஒவ்வொரு பகுதியாக திறந்தவெளி கால்வாயை மூடி வருகிறோம். குறிப்பிட்ட நிதி ஒதுக்கி செய்கிறோம். படிப்படியாக செய்கிறோம்" என கூறினார்.
ஏழைகள் கேள்வி கேட்டால் அரசு பதில் தரும் என்பதை அறிந்ததாக பேரவை நிகழ்வுகளை பார்த்த பின்பு கல்வியமைச்சரிடம் கேள்விகளை எழுப்பிய பள்ளி மாணவிகள் குறிப்பிட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை
Author: செ.ஞானபிரகாஷ்