புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வரும் புதன்கிழமை முதல் மீனவர்களுக்கு கிடைக்கும் என்று அம்மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. டீசலுக்காக மீனவர்கள் நெடும் தொலைவு செல்ல வேண்டியுள்ளதால் அந்தந்த கிராமங்களில் டீசல் பங்க் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக வீராம்பட்டினத்தில் ஐஓசி நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. பாஸ்கர் எம்எல்ஏ முன்னிலையில் மீன்வளத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
உயர்த்தப்பட்ட மீன்பிடி தடைக்கால நிவாரணம் வரும் புதன் முதல் மீனவர்களுக்கு கிடைக்கும் என அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் விசைபடகுகளுக்கு மானிய விலையில் டீசல்
Author: செ.ஞானபிரகாஷ்