புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவில் முள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்ட மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, புதுக்கோட்டை நகரில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாதத்துக்கு சராசரியாக 800 குழந்தைகள் வரை பிறக்கின்றன.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Author: செய்திப்பிரிவு