Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ராயவரம் அருகே 2021-ல் கணேசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கணேசனை கத்தியால் குத்திக் கொன்ற சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இறந்தவருக்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைக்கு பணம் இல்லை என கூறிய கணேசனை சந்தோஷ்குமார் கொலை செய்தார். சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கினார்.
Advertisement