பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக நடந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஊடகங்கள், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்யப் பயணம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் அமையும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. சீன அரசின் தலைமை பிரதிநிதி வாங் யீ தற்போது மாஸ்கோவில் இருக்கிறார், இன்று (புதன்கிழமை) ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக நடந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Author: செய்திப்பிரிவு