புதுடெல்லி: பிஹாரில் முஸ்லிம் வாக்குகளை கவர, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மார்ச் 18-ல் பாத யாத்திரை தொடங்குகிறார். இதனால் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தலைமையில் ஆளும் மெகா கூட்டணிக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம் ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. பிஹாரில் இவரது கட்சிக்கு கடந்த 2020 பேரவை தேர்தலில் 5 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். எனினும் இந்த ஐவரும் பிறகு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் நேபாள எல்லையில் அமைந்த சீமாஞ்சல் பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.
பிஹாரில் முஸ்லிம் வாக்குகளை கவர, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மார்ச் 18-ல் பாத யாத்திரை தொடங்குகிறார். இதனால் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தலைமையில் ஆளும் மெகா கூட்டணிக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
Author: ஆர்.ஷபிமுன்னா