ஈரோடு: பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதிய பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மாணவர்களின் பள்ளிப் பருவத்தில் கடைசி வகுப்பாக பிளஸ் 2 வகுப்பு அமைந்துள்ளது.
இந்த வகுப்பில் பயின்று, அரசு பொதுத்தேர்வை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் பள்ளியை விட்டு பிரியும் சூழல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக நேசித்த ஆசிரியர்கள், சக மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமல்லாது, வகுப்பறை, பள்ளி வளாகம், உணவகம் என ஒவ்வொன்றையும் மனதில் பாரத்தோடு மாணவ, மாணவியர் பிரிந்து செல்வர்.
பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதிய பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மாணவர்களின் பள்ளிப் பருவத்தில் கடைசி வகுப்பாக பிளஸ் 2 வகுப்பு அமைந்துள்ளது.
Authour: எஸ்.கோவிந்தராஜ்