சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 கணிதத் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 கணிதத் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Author: செய்திப்பிரிவு