Advertisement
மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிலன் மாகாணத்தின் ஆளுநர் ஜிம் ஹட்டாமேன் கூறியதாவது.
தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் பேசிலன் நகருக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை.
தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement