பாட்னா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி – தொழிலதிபர் அதானி இடையே உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பாதுகாக்க தனது குரலை ஒடுக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு