புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தனது பிறந்தநாளையொட்டி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு காதல் கடிதம் எழுதியுள்ளார். பிரபல தொழிலதிபர் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்கில் கைதாகி டெல்லி மண்டோலி சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்சுக்கு ரூ. 10 கோடிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி ஜாக்குலினுக்கு அவர் காதல் கடிதம் எழுதியுள்ளார். அவர் மிக அழகான பெண் என்று கூறி தொடங்கும் கடிதத்தில், ‘இந்த நேரத்தில் என்னுடைய பொம்மா(ஜாக்குலின்)இங்கு இல்லாதது கவலையாக இருக்கிறது.உன்னுடைய காதல் எப்போதும் தீராதது. உன்னுடைய அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நீ என்னை காதலிக்கிறாய்’ என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த நாளில் உருக்கம் நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் காதல் கடிதம்
Advertisement
Advertisement