புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடைமுறையை மாற்றி, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில் அண்மையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு