பிரதமர் மோடி நாளை சென்னை வருகை – ரயில், விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

13

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 8) சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்.8) மாலை 3 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 8) சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.