புதுடெல்லி: தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக,100 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார்,அது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அந்த போஸ்டர்களில்,"மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ" (மோடியை அகற்றி நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர பதாக் கூறுகையில்,"நகர் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பும் போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக போலீஸார் 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக,100 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார்,அது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு