புதுடெல்லி: இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.
ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியா வந்துள்ளார். மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து உரையாடினார். அப்போது, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெய்சங்கரிடம் ஜேம்ஸ் கிளவர்லி கேட்டதாக தகவல் வெளியானது.
இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு