Advertisement
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தொடர் வெற்றி முகம் காணும் ஆம் ஆத்மி மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவை வீழ்த்தியதோடு, நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்ட காங்கிரஸைக் களத்தில் காணாமல் போகச் செய்துள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றி ஒரு மாபெரும் விவாதப் பொருளாக இருக்கும் அதே வேளையில் காங்கிரஸின் தோல்வி அலசி ஆராயப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
“காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே உற்று உள்நோக்கி சரிசெய்ய வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனையைச் செய்துகொண்டு புதிய உத்வேகம் செயற்திட்டம், புதிய தத்துவ முனைப்போடு காங்கிரஸ் வரவில்லை என்றால் கட்சியின் எதிர்காலம் மோசமாகிவிடும்”
பாரதி ஆனந்த்
Advertisement