சென்னை: வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்க செய்ய காவல் துறைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்ற உம்ராவ், திருப்பூரில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்க செய்ய காவல் துறைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: ஆர்.பாலசரவணக்குமார்