நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜகவினர் – காங்கிரஸார் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி இழப்பைக் கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து இளைஞர் காங்கிரஸார் பேரணியாக சென்றனர். வழியில் உள்ள பாஜக அலுவலக வாயிலில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.
நாகர்கோவிலில் பாஜகவினர் – காங்கிரஸார் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு