சென்னை: பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கனா சபாவில் சென்னை இலக்கிய விழா மூன்றாம் ஆண்டு பதிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டு, ‘பாரதியாரின் கவிதைகளும், அறிவியலும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணி என்பது பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அது எப்படி இருந்தாலும், அதில் பாஜகவின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதில் மாநில தலைவராக நான் தெளிவாக இருக்கிறேன்.
பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு