Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக, அந்நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக பணியாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக, அந்நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக பணியாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement