புதுடெல்லி: பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)’ கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்ணா பூர்ண தேவி பதில் அளித்தார்.
விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ‘பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களை விஞ்ஞானிகளாக வளர்த்தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)ஆகும். திறமையான மாணவர்களை அடையாளம் காண என்சிஇஆர்டிக்கு, என்டிஎஸ்எஸ் உதவியிருக்கிறதா? என்டிஎஸ்எஸ் திட்டத்தை அரசாங்கம் தொடர்கிறதா? இல்லையென்றால், அது நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்.
பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமை தேடல் திட்டம் (என்டிஎஸ்எஸ்)’, கடந்த 2021ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, திமுக எம்பி, டி.ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்னா தேவி பதில் அளித்தார்.
Author: ஆர்.ஷபிமுன்னா