சென்னை: பள்ளி நடத்துவதற்காக கர்நாடகா சங்கத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தியாகராயநகரில் கர்நாடகா சங்கத்தின் சார்பில் பள்ளி நடத்துவதற்காக, சென்னை மாநகராட்சி நிலத்தை 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தது. இந்த குத்தகை 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின், குத்தகை காலம் நீட்டிக்கப்படவில்லை. குத்தகையை புதுப்பிக்கக்கோரிய கர்நாடகா சங்கம், அந்த இடத்தில் தொடர்ந்து பள்ளியை நடத்தி வந்தது. 2019-ம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி 75 லட்சத்து 90 ஆயிரத்து 554 ரூபாயும், சேவை வரி 13 லட்சத்து 66 ஆயிரத்து 300 ரூபாயும் செலுத்தப்படவில்லை.
பள்ளி நடத்துவதற்காக கர்நாடகா சங்கத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: ஆர்.பாலசரவணக்குமார்