Advertisement
சென்னை: பள்ளிக்கரணை ராம்சர் ஈரநிலத்தில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கரணை ராம்சர் ஈரநிலத்தில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement