திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்.18) நடைப்பெற்றது. அதில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ரூ.18.6 லட்ச ரூபாய் மதிப்புடைய 1,18 செல்போனைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி சித்தரவதை செய்த விவகாரம் புலன் விசாரணையில் இருக்கிறது. அது தொடர்பாக பேசினால் அது விசாரணையை பாதிக்கும். இது சம்பந்தமாக பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு