“சாதாரண நடுத்தர குடும்பம்தான் என்னுடையது. ஆனால் இன்று என்னால் சில பேருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் அன்றிலிருந்து இன்று வரை என் குடும்பத்தினர் தந்த சப்போர்ட் பெரும் பலம் என்று நம்புகிறேன். அன்று எந்தவிதமான வருமானமும் இல்லாத நிலையில் தான் இந்த யூடியூப் சேனலை ஆரம்பித்தோம். முதலில் எல்லாரையும் போல… கமகம தக்காளி சாதம் செய்வது எப்படி? என்பது போலதான் வீடியோ போட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால், அதில் உள்ள கஷ்டம் எங்களைப் போன்ற யூடியூபர்களுக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் அதன்பிறகு அத்தனை பாத்திரங்களையும் கழுவி சரி செய்யும்வரை நாமளோதான் செய்யவேண்டும். அது ஒருநாள் இல்லை பல நாள் தொடர் வேலை.
எனவே, இனி இது நமக்கு செட் ஆகாதுப்பா என்ற லெவலில் தான் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நமக்கு எது வருமோ அதை செய்வோம் என்றபடிதான் ஃபுட் ரிவியூவில் இறங்கினேன். பொதுவாகவே நான் நன்றாக சாப்பிடக்கூடிய பெண் என்பதால்தான் இந்த முடிவை தைரியமாக எடுத்தேன்” என்கிறார் கிருத்திகா.
சாதாரண நடுத்தர குடும்பம்தான் என்னுடையது. ஆனால் இன்று என்னால் சில பேருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் அன்றிலிருந்து இன்றுவரை என் குடும்பத்தினர் தந்த சப்போர்ட் பெரும் பலம் என்று நம்புகிறேன்.
Authour: ஜி.காந்தி ராஜா