மதுரை: தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த தொழில்நுட்ப கல்வி ஆணையருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த கனகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழவிளை காமராஜ் பாலிடெக்னிக்கில் 1982-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 1989-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். எனக்கு 2006-ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனது பதவி உயர்வை அங்கீகரிக்க தொழில்நுட்பக்கல்வி ஆணையருக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரை அனுப்பியது. ஆனால் அந்த பரிந்துரையை ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த தொழில்நுட்ப கல்வி ஆணையருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Author: கி.மகாராஜன்