சென்னை: பட்டியலின மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே,தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தலையிட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேபள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: வி.மாதேபள்ளியில் உள்ள சக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அறநிலையத் துறை, சீனிவாசனுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதையடுத்து, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தனக்குச் சொந்தமான நிலத்தை, அறநிலையத் துறை சட்டவிரோதமாக எடுக்க முயற்சிப்பதாக சீனிவாசன் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார்.
பட்டியலின மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே,தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தலையிட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு