சென்னை: பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மிகவும் அபாயகரமானது என்பதாலும், உரிய பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்காவிடில் தொழிலாளர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உருவாகும் என்பதாலும், பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகளால் காலமுறை ஆய்வு செய்யப்படுவதும், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான செயல்முறைகள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுவதும் வழக்கமாகும். இது மட்டுமல்லாமல் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடங்களில் நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள
Author: செய்திப்பிரிவு