புதுடெல்லி: மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 13) நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன.
இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தில் எதிர்கட்சிகள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவல் அறையில், எதிர்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதற்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இதில், காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் தல், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), மதிமுக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 13) நாடாளுமன்றத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன.
Author: செய்திப்பிரிவு