சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் நானாகல் அம்பியான என்ற இடத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தாராபூர் என்ற கிராமத்தில் அம்ரித்பால் சிங் சென்ற பைக் நிறுத்தப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
Author: செய்திப்பிரிவு