அபுஜா: ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். எனவே, நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கோபமடைந்த மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பால் மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு