Advertisement
சென்னை: விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Advertisement