சென்னை: தமிழகத்தில் வரும் ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.6,600 கோடியில் தடுப்பணை, பண்ணை குட்டைகள் உட்பட இயற்கைவள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், வரும் ஆண்டில் ரூ.6,600 கோடி மதிப்பில் இயற்கைவள மேலாண்மைப் பணிகளான தடுப்பணை, பண்ணை குட்டைகள், கசிவுநீர்க் குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல்வரப்பு, மண்வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் வரும் ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.6,600 கோடியில் தடுப்பணை, பண்ணை குட்டைகள் உட்பட இயற்கைவள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு