நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

18

சென்னை: 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு -மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.