திருப்பத்தூர்: “அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, எல்என்சிக்கு தாரை வார்க்கும் பணியில் இறங்கியுள்ளார்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் பாமக நிர்வாகி இல்லத் திருமண விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து, திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியது: ''தமிழகத்தில் மிக பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்க பாமக தொடர்ந்து போராடி வந்தது. அதன் அடிப்படையில், கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது. இதில், பாமகவிற்கு முக்கிய பங்கு உள்ளது.
அமைச்சர் பன்னீர்செல்வம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, எல்என்சிக்கு தாரை வார்க்கும் பணியில் இறங்கியுள்ளார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு