சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "என்னை ஒருமனதாக தேர்வு செய்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (மார்ச் 29) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “என்னை ஒருமனதாக தேர்வு செய்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு